×

மூத்த வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடு

 

நாகப்பட்டினம்,மார்ச்21: நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த படிவம் 12 (டி) தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் அளித்துள்ள இந்த சிறப்பு வசதியை 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். எனவே அந்த படிவத்தை பூர்த்தி செய்து மீள 5 நாட்களுக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மூத்த வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Janidam Varghese ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...